Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் : பொதுபல சேனா!

In இலங்கை
Updated: 13:42 GMT, Mar 13, 2018 | Published: 13:42 GMT, Mar 13, 2018 |
0 Comments
1238
This post was written by : Ravivarman

பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முஸ்லிம் மக்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். பொதுபல சேனா உங்கள் எதிரி அல்ல. உயர்மட்ட அதிகாரிகளே உங்கள் எதிரிகள்.

குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் பொதுபல சேனா அமைப்பு முன்னின்று செயற்பட்டமை அனைவருக்கும் தெரியும்.

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்தே இதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேச வேண்டும். இதைச் செய்ய முடியாமல் போனால் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவே இருக்க முடியாது.

இடம்பெற்ற அனைத்து வன்முறைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பிரதமரும் பொலிஸ் மா அதிபருமே. அவர்களுக்கெதிராகவே முதலில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்’ என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg