Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைதுசெய்யப்பட்ட அமித் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்லலாம்: பொலிஸ்!

In இலங்கை
Updated: 15:39 GMT, Mar 13, 2018 | Published: 15:39 GMT, Mar 13, 2018 |
0 Comments
1261
This post was written by : Ravivarman

வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வது அவரது தனிப்பட்ட உரிமை எனவும், அவரது முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கைது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தேவைப்பட்டால் தேவையான விளக்கங்களை அளிப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg