Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் பேரரசருடன் ஜனாதிபதி சந்திப்பு!

In இலங்கை
Updated: 15:58 GMT, Mar 13, 2018 | Published: 15:58 GMT, Mar 13, 2018 |
0 Comments
1080
This post was written by : Ravivarman

ஜப்பானுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அந்த நாட்டின் பேரரசர் அகிஹிதோவை சந்தித்துள்ளார்.

டோக்கியே நகரில் உள்ள இம்பீரியஸ் மாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜப்பான் பேரரசர், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் உறவு இந்த விஜயத்தின் மூலம் மேலும் பலம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பான முதலீட்டு மாநாடு ஜப்பானில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg