Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படகு கவிழ்ந்து உயிரிழந்த ஐவரின் சடலங்களும் ஒரே குழியில் நல்லடக்கம்!

In இலங்கை
Updated: 16:20 GMT, Mar 13, 2018 | Published: 16:20 GMT, Mar 13, 2018 |
0 Comments
1086
This post was written by : Ravivarman

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகுளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த ஐவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, நிலாவெளி இந்து மயானத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. இதில் ஊர்மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் சென்றிருந்த நிலாவெளி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9), சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் தோணியை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பூஜை வழிபாட்டிற்குச் சென்ற இவர்கள், பூஜைக்காக தாமரைப் பூக்களை பறிக்க குளத்திற்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg