Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

In இலங்கை
Updated: 16:40 GMT, Mar 13, 2018 | Published: 16:40 GMT, Mar 13, 2018 |
0 Comments
1202
This post was written by : Ravivarman

சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மற்றும் அம்பாறைச் சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்தையும் தடைசெய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகையினால் இந்த வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதற்கான புதிய செயற்திட்டமொன்றினை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இதன்பொருட்டு அரசாங்கமும், நாட்டு மக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் தேசிய ஒற்றுமையை இல்லாது செய்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தனிப்பட்ட நபர்களின் தன்மானத்திற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றை இல்லாதுசெய்து சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலுவலர்கள், வர்த்தகர்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்புரிபவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றியதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஜனாதிபதியை வரவேற்றனர்.

இச்சந்திப்பில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்ஹ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg