Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நியாயப்படுத்த முடியாது!

In இன்றைய பார்வை
Updated: 23:29 GMT, Mar 13, 2018 | Published: 23:29 GMT, Mar 13, 2018 |
0 Comments
1237
This post was written by : Arun Arokianathan

இலங்கையில் முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றன முடக்கப்பட்டு இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன.

இனவன்முறைக்கு தூபமிடுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கே சமூக வலைத்தளங்கள் மீதான தடை அவசியமாகின்றதென அரசாங்கத்தின் உயர்மட்டத்தலைவர்கள் பலரும் கருத்துரைத்திருக்கின்றனர் .

ஆனால் உண்மையாகவே இந்தத்தடை எதற்காக என்பது தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளார்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

சாட்சியமற்ற யுத்தம் சாட்சியமற்ற வன்முறை என சிறுபான்மை இனங்களுக்கு எதிராக இலங்கைப் பேரினவாத அரசு காலாகாலமாக செய்துவரும் அடக்குமுறைகளை இன அழிப்பை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்கச் செய்யும் யுக்தியே சமூக தொடர்பாடல் வலைத்தளங்கள் மீதான தடை என்ற காத்திரமான கருத்தை முன்வைத்திருக்கின்றார் இயக்குநர் ரஞ்சித் யோசப்.

இலங்கையில் ஆறுமில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் இருக்கின்ற நிலையில் எண்ணக்கையில் மிகக்குறைவானவர்களாக காணப்படும் இனவாதிகளின் பதிவுகளுக்கு அஞ்சி சமூக வலைத்தளங்களை தடைசெய்வதா? அன்றேல் இனவாதிகளால் பதிவிடப்படும் குரோதப்பதிவுகளை இனங்காணவும் தொடர்ச்சியாக அவ்வாறு பதிவிடும் வலைத்தளக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுப்பதா? என்ற கேள்வி வரும் போது பிந்திக் கூறிய விடயமே சரியான தெரிவு என்பது புலனாகும்.

இந்த நாட்டுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கி தகவல்களை தங்குதடையற்று( பாதுகாப்பு மற்றும் முக்கிய பொருளாதார விடயங்கள் தவிர) பெற்றுக்கொள்ள ஆவன செய்ததாக பறைசாற்றுகின்ற அரசாங்கம் இன்று சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளமையானது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்ற செயற்பாடாகவே அமைந்துள்ளதென்றால் மிகையல்ல

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg