Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் கைது!

In இந்தியா
Updated: 02:26 GMT, Mar 14, 2018 | Published: 02:26 GMT, Mar 14, 2018 |
0 Comments
1181
This post was written by : Velauthapillai Kapilan

தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் நிதி திரட்டிய ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்தது.

இவ்வாறு நிதி திரட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவான காரியங்களில் ஈடுபட்டு வருவது பற்றி விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

அதன்படி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் அடிப்படையில், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இந்தியர் ஹாஜா பக்ருதீன் மற்றும் காஜா மொய்தீன், ஷாகுல் ஹமீது, அன்சார் மீரான் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்தது. பின்னர் வழக்கு தொடர்பில் குறித்த நால்வர் மீதும் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஹாஜா பக்ருதீன் தனது நண்பர்களுடன் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி திரட்டியதாகவும், ஆட்களை சேர்த்ததாகவும், பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஹாஜா பக்ருதீன் சென்னைக்கு 3 தடவைகள் வந்ததாகவும், சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் பெங்களூரில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாகவும், பின்னர் 2014 ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg