Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் மோசடி குற்றச்சாட்டில் சிக்கினார் நிரவ் மோடி!

In இந்தியா
Updated: 03:32 GMT, Mar 14, 2018 | Published: 03:00 GMT, Mar 14, 2018 |
0 Comments
1149
This post was written by : Velauthapillai Kapilan

வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நெஷனல் வங்கியில் மேலும் சுமார் ரூ.942 கோடி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நெஷனல் வங்கியில் ரூபாய் 11,700 கோடி வரை கடன் பெற்றிருந்த நிலையில் அக்கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக சி.பி.ஐ., அமுலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை போன்றவை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரூ.12,646 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் நெஷனல் வங்கியில் கூடுதலாக ரூ.942 கோடி வரை மெகுல் சோக்ஷி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தற்போது மோசடி தொகை ரூ.13,570 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் டெல்லியைச் சேர்ந்த வைர நகை நிறுவனமான துவாரகா தாஸ் இன்டர்நெஷனல் ஓரியண்டல் வங்கியில் ரூ.385.85 கோடி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பாங்க் ஒஃப் பரோடாவில் ரூ.6,000 கோடி மோசடி செய்திருப்பதாக  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்வதால், கொடுத்த கடனை வசூலிக்க முடியாத நிலை ஏற்படுவதாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி தற்போது ரத்து செய்துள்ளது.

பஞ்சாப் நெஷனல் வங்கியில் நிரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg