Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகராட்சிக்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம்

In இந்தியா
Updated: 03:29 GMT, Mar 14, 2018 | Published: 03:29 GMT, Mar 14, 2018 |
0 Comments
1131
This post was written by : Kemasiya

கட்டட பொருட்களுக்கு மாநகராட்சி விதிக்கும் கட்டண அறவீட்டுக்கு எதிராக, புதுடெல்லியில் வர்த்தகர்கள் பாரிய  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இறந்தவரின் சடலத்தைப் போன்று பாவனை செய்து, அதனை நடு வீதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வர்த்தகர்கள், கட்டண அறவீடு மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மாநகராட்சிகள் சீல் வைக்கின்றமை ஆகிய விடயங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பதாதைகளை ஏந்தி, சில்வர் பாத்திரங்களினால் ஓசை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பில் வர்த்தக சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கந்தெல்வால் கூறுகையில்,

“சில்வர் பொருட்களுக்காக மாநகராட்சியினால் அறவிடப்படும் அநீதியான கட்டணத் தொகை தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg