Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:35 GMT, Mar 14, 2018 | Published: 03:30 GMT, Mar 14, 2018 |
0 Comments
1103
This post was written by : Puvanes

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப்போட்டியில் கோவா எப்.சி அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடைபெற்ற குறித்த போட்டியில் சென்னை எப்.சி. அணியுடன், கோவா எப்.சி. அணி பலப்பரீட்சை நடத்தியது.

ஆரம்பம் முதலாகவே விறுவிறுப்பாக நகர்ந்த குறித்த போட்டியின் 26ஆவது நிமிடத்தில் ஜே.ஜே. மூலமாக சென்னை அணி தனது முதலாவது கோலினைப் பதிவு செய்து கொண்டது.

தொடர்ந்து 29 ஆவது நிமிடத்தில் தனபால் மூலம் சென்னை மேலும் ஒரு கோலினை பதிவு செய்ய, இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஜே.ஜே மற்றுமொறு கோலினைப் பதிவு செய்தார்.

பதிலுக்கு கோவா அணியினர் எந்த கோலினையும் பதிவு செய்யவில்லை. எனவே 3 – 0 என்ற கணக்கில் சென்னை வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

மேலும் குறித்த இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்த காரணத்தினால் 4 – 1 என்ற மொத்த கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg