Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி சம்பவம் வொஷிங்டனின் கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது: தமரா குணநாயகம்

In இலங்கை
Updated: 03:30 GMT, Mar 14, 2018 | Published: 03:30 GMT, Mar 14, 2018 |
0 Comments
1477
This post was written by : Risha

இலங்கையில் அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்களானது, இலங்கை மீதான சர்வதேச தலையீட்டின் அவசியம் குறித்த வொஷிங்டனின் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட இனத்தை இலக்குவைத்து அண்மையில் கண்டியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வொஷிங்டனின் தீர்மானம் பரந்தளவில் இலங்கை மக்களால் மறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக அமெரிக்கா கவலையடைந்திருந்த நிலையில், இந்த சம்பவங்கள் அமெரிக்காவிற்கு சாதகமான வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இத்தருணத்தில் இடம்பெறும் மோதல் சம்பவங்களானது, 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg