Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர வீரர் விளையாடுவதில் சந்தேகம் – கவலையில் இலங்கை அணி

In கிாிக்கட்
Updated: 03:54 GMT, Mar 14, 2018 | Published: 03:54 GMT, Mar 14, 2018 |
0 Comments
2135
This post was written by : Puvanes

இலங்கையின் கௌரவமிக்க கிரிக்கெட் தொடராக கருதப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடுத்த முக்கிய போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொடரில் குசல் பெரேரா  ரி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமயம் குசலுக்கு காயம் ஏற்பட்டது.

இதன்காரணமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16ஆம் திகதி) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் குசல் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குசல் பெரேரா தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போதைய நிலையில் 24 மணித்தியாலங்களின் பின்னரே அவரது உடற்தகுதி தொடர்பாக முழுமையாக அறிவிக்க முடியும் என இலங்கை அணியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் அணியுடன் இலங்கை மோதும் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது, இல்லையெனில் இலங்கை சுதந்திரக் கிண்ண தொடரை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் அணியில் சிறப்பாக விளையாடி வரும் குசல் பெரேராவின் காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை அணித்தரப்பு கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg