Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச வேலைவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 05:10 GMT, Mar 14, 2018 | Published: 04:14 GMT, Mar 14, 2018 |
0 Comments
1086
This post was written by : Kemasiya

அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலைவாய்ப்பினை வலியுறுத்தும் சுலோகங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு, தமிழக அரசாங்கம் செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்களின் பொருளாதார நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 2000இற்கும் மேற்பட்ட செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரகாரம், மூன்று வீத வேலைவாய்ப்பு ஒதுக்கப்பட்டது. அதேபோல் செவிப்புலனற்றோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg