Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் சுழல் காற்று: கலாசார நிலையம் சேதம்

In இலங்கை
Updated: 04:56 GMT, Mar 14, 2018 | Published: 04:14 GMT, Mar 14, 2018 |
0 Comments
1129
This post was written by : poovannan

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் வீசிய சுழல்காற்றினால், போரதீவுப்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையம் சேதமுற்றுள்ளது.

கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசிவருகின்ற நிலையில், அப்பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த சுழல் காற்றினால் இந்த கலாசார மத்திய நிலையத்தின் கூரை சேதமுற்றுள்ளது.

உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்த கலாசார மத்திய நிலையத்தில் நடனம் மற்றும் சங்கீதம் போன்ற பல வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg