Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் இளம் பெண்கள் சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

In இலங்கை
Updated: 05:58 GMT, Mar 14, 2018 | Published: 04:54 GMT, Mar 14, 2018 |
0 Comments
1086
This post was written by : poovannan

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு – தெமட்டகொட முஸ்லிம் இளம் பெண்கள் சங்கத்தினர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் 17ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவி பவாஸா தாஹா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக ‘பெண்களின் குரல்’ இயக்கத்தின் தலைவியும் இலங்கை மாதர் சங்கம் இந்து மகளிர் மன்றம் ஆகியவற்றின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான மிதிலா பத்மநாதன் கலந்துகொள்ள இருக்கின்றார்.

இந்நிகழ்வில், சங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு துறைகள் சார்ந்த பெண்களின் திறமைகளும் ஆற்றல்களும் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படும்.

அத்துடன் நிபுணத்துவம் பெற்றவர்களால், அழகுக்கலை மற்றும் சமயற்கலை ஆகியவை தொடர்பான செயன்முறைகளும் செய்து காட்டப்படவுள்ளன.

மேலும் பார்வையாளர்களுடன் பெண்களின் விழிப்பூட்டல் தொடர்பாக பகிரங்க கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg