Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். குறித்து நெஹ்ரா கூறியுள்ள புதுத்தகவல்!

In கிாிக்கட்
Updated: 05:28 GMT, Mar 14, 2018 | Published: 04:24 GMT, Mar 14, 2018 |
0 Comments
1203
This post was written by : Puvanes

ஐ.பி. எல் கிரிக்கெட் போட்டிகள் என்பது வெறும் துடுப்பாட்ட வீரர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு அல்ல என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.பி.எல். போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. சொற்ப பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிக ஓட்டங்களைக் குவிக்கும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

ஆனால் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும்கூட அது பேசப்படுவதில்லை. ஆனால் நான்கு ஓவர்களுக்கு 60 ஓட்டங்களைக் கொடுத்தால் மட்டும் அந்த விடயம் விமர்சிக்கப்படுகின்றது எனவும் நெஹ்ரா சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரர்களைப் போன்ற சமமான பணிகளை பந்துவீச்சாளர்களும் செய்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட நெஹ்ரா, ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பணி முக்கியம் வாய்ந்தது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக இருந்த நெஹ்ரா சென்ற வருடம் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வுகளை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் தற்போது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg