Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழர்கள் கொல்லப்படும்போது ராகுல் எங்கிருந்தார்? – தமிழிசை

In இந்தியா
Updated: 16:30 GMT, Mar 14, 2018 | Published: 04:43 GMT, Mar 14, 2018 |
0 Comments
1212
This post was written by : Kemasiya

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எங்கிருந்தார் என தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருப்பூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த தமிழிசை மேற்கண்டவாறு கேள்வி தொடுத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது போர்குற்றம் என அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அன்றைய நிலையில் இந்தியாவை ஆட்சி செய்த மத்திய அரசின் துணையுடனேயே போர் புரிந்ததாக, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கிருந்தார்?

எனவே ரஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விடுகிறோம் என ராகுல் கூறுவது வெறும் அரசியல் நோக்கம்” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg