Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபேஸ்புக் மூலம் நாடு நிர்வகிக்கப்படுமாயின் அரசாங்கமும் சட்டமும் எதற்கு?

In இலங்கை
Updated: 04:31 GMT, Mar 14, 2018 | Published: 04:31 GMT, Mar 14, 2018 |
0 Comments
1353
This post was written by : Risha

நாட்டை நிர்வகிக்கும் பிரதான ஊடகமாக ஃபேஸ்புக் விளங்குமாயின், நாட்டில் அரசாங்கமும் சட்டமும் எதற்கு என இலங்கை இணையத்தள ஊடகங்களின் தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய குறித்த சங்கத்தின் அங்கத்தவரும், சட்டத்தரணியுமான பிரபோத ரத்நாயக்க இவ்வாறு வினவினார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”கண்டி கலவரத்திற்கு சமூக வலைத்தள பதிவுகளே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதற்கேற்ப அக்காலப்பகுதியில் அவை தடை செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் தற்போது பிரச்சினைகள் ஓய்ந்துள்ள நிலையில் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களை முடக்கியிருப்பது தேவையற்றதொன்றாகும்.

நாட்டின் நிலைமையை சீர்செய்ய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டை ஃபேஸ்புக்தான் நிர்வகித்து வருகின்றது என்றால், நாட்டிற்கு அரசாங்கமும் சட்டமும் தேவையில்லை.

வெளியிலுள்ள இனவாதிகளை பாதுகாத்துக்கொண்டு, ஒழிந்துகொண்டிருக்கும் இனவாதிகளை கண்டுபிடிப்பதற்காக ஃபேஸ்புக்கை முடக்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இனவாதத்தை முறியடிக்க வேண்டுமாயின், வெளியில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலுள்ள இனவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg