Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம்

In
Updated: 13:11 GMT, Mar 14, 2018 | Published: 04:53 GMT, Mar 14, 2018 |
0 Comments
1376
This post was written by : Elakkiya

கருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளால் நன்கு அறியப்பட்டவரும், பிரித்தானிய இயற்பியலாளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் தனது 76ஆவது வயதில் காலமானார். இங்கிலாந்து கேம்பிறிட்ஜில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

21 வயதில் அமையோட்ரோபிக் லட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹோக்கிங் கை, கால்கள் மற்றும் உடல் அவயவங்கள் இயக்கமற்று பேச்சுத்திறனையும் இழந்தார். இந்நிலையில் சக்கரநாற்காலியே அவருடைய இருப்பிடம் ஆகியது. ஸ்டீபன் ஹோக்கிங் சில ஆண்டுகள் மாத்திரமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

எனினும், இயற்பியல் ஆராய்ச்சிகள், எழுத்துத்துறை மற்றும் பொதுவாழ்வில் அதிக ஈடுபாட்டினை கொண்ட ஸ்டீபன் ஹோக்கிங் பல சாதனை கண்டுபிடிப்புக்களை அதன்பின்னரே நிகழ்த்திக் காட்டினார்.

அண்டவியலும் குவாண்டம் ஈர்ப்பும் இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகளாகும். அதுமட்டுமின்றி, கருந்துளைகள், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் குறித்த இவருடைய கட்டுரைகள் ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

கருந்துளையிலிருந்து ஒளி உட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்ற கருத்துக்கு மாறாக கருந்துளைகள் துணிக்கைகளை வெளியேற்றுகின்றன என்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும் 1974 ஆம் ஆண்டு கதிர்வீச்சு கோட்பாட்டை கோடிட்டுக் காட்டினார்.

இவ்வாறு விஞ்ஞான உலகில் பல சாதனைகளைப் படைத்த  இவருடைய மறைவு விஞ்ஞான உலகில் பேரிழப்பாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg