Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானுடனான உறவு மேலும் வலுப்படும்: மலிக் நம்பிக்கை

In இலங்கை
Updated: 04:59 GMT, Mar 14, 2018 | Published: 04:59 GMT, Mar 14, 2018 |
0 Comments
1137
This post was written by : Risha

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பானுக்கான சுற்றுப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வழிவகுக்கும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவுகள், ஜனாதிபதி மைத்திரியின் இவ்விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக இலங்கை, இராஜதந்திர, கலாசார, வர்த்தக மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜப்பானுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

குறித்த முதலீட்டு மாநாட்டில் இரு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg