Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் பழைமைவாய்ந்த தொடர் ஆரம்பம்: சாதிப்பார்களா இந்தியர்கள்?

In விளையாட்டு
Updated: 06:15 GMT, Mar 14, 2018 | Published: 05:01 GMT, Mar 14, 2018 |
0 Comments
1067
This post was written by : Puvanes

உலகின் பழைமை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான all-england பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடர் இன்று (புதன்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.

1899ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குறித்த பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றிவாகை சூட வேண்டும் என்பது வீர, வீராங்கணைகளின் கனவு என்பதனால் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகும்.

இந்தியாவின் சார்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கணைகளான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோரும் ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்தும் கலந்து கொள்கின்றனர்.

குறித்த போட்டிகள் தொடர்காக ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில், “இந்தத் தொடரில் வெற்றி பெறுவது ஜாம்பவான் என்ற அந்தஸ்தினைக் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நூற்றாண்டு கால பழைமைவாய்ந்த இத்தொடரில் 1980ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனே மற்றும் 2001ஆம் ஆண்டு கோபிசந்த் ஆகியோர் மாத்திரமே பட்டம் வென்று இந்திய தேசத்திற்காக பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்கள் எப்போதுமே எனக்கு உத்வேகம் அளிப்பார்கள்” எனவும் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- பி.சுமீத், ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜக்கம்புடி மேஹானா- பூர்விஷா, அஸ்வினி- ரெட்டி என்.சிக்கி ஆகியோரும் கலப்பு இரட்டையர் பிரிவில் ரெட்டி என்.சிக்கி- பிரனாவ் ஜெர்ரி சோப்ரா ஆகிய இந்திய ஜோடிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg