Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாத இறுதியில் அலுவலகத்தை விட்டு வெளியேறுவேன்: டில்லர்ஸன்

In
Updated: 06:25 GMT, Mar 14, 2018 | Published: 05:25 GMT, Mar 14, 2018 |
0 Comments
1222
This post was written by : Elakkiya

டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இம்மாத இறுதியில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். தனது பொறுப்புக்களை மாநில திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டில்லர்ஸன், “நாடு கணிசமான கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஒரு காலகட்டத்தில் ஒழுங்கற்ற மற்றும் மென்மையான மாற்றத்தை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுடன் மாநில இராஜாங்க திணைக்கள பொறுப்புக்கள் மாற்றம் பெறுகின்றன. என்னுடைய பொறுப்புக்களை துணைச் செயலாளரிடம் ஒப்படைப்பேன். கடந்த 14 ஆண்டுகளாக உங்களுடன் பணியாற்றுவதற்கு கிடைத்தமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாக 300 மில்லியன் அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் நாட்டின் சாதாரண குடிமகனாக தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பவுள்ளேன். ஒரு அமெரிக்கனாக பெருமை அடைகின்றேன். என் நாட்டிற்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்புக்காக பெருமை அடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தனது நிர்வாக விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த டில்லர்ஸன், “சிரியாவில் நாங்கள் முக்கியமான யுத்த நிறுத்தங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த யுத்த நிறுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. குறிப்பாக சமாதானத்தை அடைவதற்கும் ஈராக்கை உறுதிப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான அரசாங்கத்தை நிறுவவும், உலகளாவிய பிரசாரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்கவும் பங்களித்துள்ளோம்.

ரஷ்ய அரசாங்கத்தின் குழப்பமான நடவடிக்கை மற்றும் செயற்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. ரஷ்ய மக்கள் மற்றும் உலகின் பரந்துபட்ட நலன்களில் அவர்களின் நடவடிக்கை எவ்வாறு அமையும் என்பதை ரஷ்யா கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். தற்போதைய பாதையில் அவர்கள் தொடர்ந்து பயணித்தால் தனிமைப்படுத்தல்களுக்கு வழிவகுக்கும்” என்றும் எச்சரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg