Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெய்லும், யுவராஜ் சிங்கும் வெற்றி வீரர்கள்: சேவாக்

In கிாிக்கட்
Updated: 06:50 GMT, Mar 14, 2018 | Published: 05:34 GMT, Mar 14, 2018 |
0 Comments
1139
This post was written by : Puvanes

கிறிஸ் கெய்ல் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுத் தந்தால் போதும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் ஆலோசகருமான சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கெய்ல் மற்றும் யுவராஜ் ஆகியோர் 2 கோடி என்ற அடிப்படை விலையில் பஞ்சாப் அணிக்கு கிடைத்துள்ளது எமக்கு கிடைத்துள்ள சிறப்பான வாய்ப்பாகும் எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

என்றாலும் அவர்களை ஏனைய அணிகள் ஏலத்தில் கேட்டிருந்தால் அதிக விலைக்கு சென்றிருப்பார்கள் எனவும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள் இருவருமே சிறப்பான வீரர்கள் அது மாத்திரமின்றி போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் வீரர்கள். இவர்கள் இருவரும் ஓரிரு போட்டிகளின் மாத்திரம் வெற்றியை பெற்றுக் கொடுத்தால் அவர்களுக்காக நாம் முதலீடு செய்ததன் பலனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சேவாக் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg