Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய பரிணாமத்தில் மீண்டும் சுதந்திரன்!- யாழில் வெளியீடு

In இலங்கை
Updated: 05:52 GMT, Mar 14, 2018 | Published: 05:52 GMT, Mar 14, 2018 |
0 Comments
1287
This post was written by : Risha

தமிழ் தேசியத்தின் இதயத் துடிப்பான, புதிய சுதந்திரன் பத்திரிகை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், சுதந்திரன் பத்திரிகை வெளியீடும், இணையத்தள அங்குரார்ப்பணமும் யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

பத்திரிகையின் முதல் பிரதியை பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் எம். அகிலனிடமிருந்து மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப் பிரதிகள் வழங் வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தந்தை செல்வாவின் காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ‘சுதந்திரன்’ என்ற பெயரில் ஈழத்திலிருந்து பத்திரிகை வெளியானது . சுதந்திரனின் முதல் இதழ் 1947 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதியன்று வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன், 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 – 1961 காலத்தில் எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. இனக்கலவரத்தை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் இந்தப்பத்திரிகை வெளியீடு 1983இன் இறுதியில் நிறுத்தப்பட்டது.

35 வருடங்களின் பின்னர் தற்போது அது புதிய பரிணாமத்தில்’ புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg