Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரம்: ஆதாரங்களை திரட்டும் தடயவியல் அதிகாரிகள்

In
Updated: 06:10 GMT, Mar 14, 2018 | Published: 06:10 GMT, Mar 14, 2018 |
0 Comments
1167
This post was written by : Elakkiya

பிரித்தானியா மற்றும் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவருடைய மகள் யூரி விவகாரத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

குறித்த இருவரும் கடந்த 4ஆம் திகதி சொல்ஸ்பரி பல்பொருள் அங்காடி ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் என பிரித்தானிய தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொல்ஸ்பரி பகுதியில் தடயவியல் அதிகாரிகள் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். எனினும், தம்மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா, குறித்த தாக்குதல் சம்பவத்தின் ஆதாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா மறுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg