Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் மாபெரும் கண்டனப் பேரணி!

In இலங்கை
Updated: 07:35 GMT, Mar 14, 2018 | Published: 07:02 GMT, Mar 14, 2018 |
0 Comments
1197
This post was written by : poovannan

காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகின்றது. இதனை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.   காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் அமைப்பினர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு குறித்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் “வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் தினமும் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். இதனை எமது அரசியல் தலைமைகள் கவனிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் அமர்வுகளின் போது, இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள், படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

போர்க்குற்ற விசாரணை சர்வதேசப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு, பாதிக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  இந்நிலையில், இப்போராட்டத்திற்கு, கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg