Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கிலும் உதயமானது ‘புதிய சுதந்திரன்’!

In இலங்கை
Updated: 06:11 GMT, Mar 14, 2018 | Published: 06:11 GMT, Mar 14, 2018 |
0 Comments
1109
This post was written by : Risha

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகப்பூர்வ பத்திரிகை ‘புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் மட்டக்களப்பிலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் உயர்மட்ட தலைமைகளால் இன்று (புதன்கிழமை) இப்பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், மதகுருமார்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் இன்று காலை இப்பத்திரிகை வெளியிடப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டு வந்த சுதந்திரன் பத்திரிகை, நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது புதிய பரிணாமத்தில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg