Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசரகால நிலை தொடர்ந்து நீடிப்பு!

In இலங்கை
Updated: 06:56 GMT, Mar 14, 2018 | Published: 06:23 GMT, Mar 14, 2018 |
0 Comments
1224
This post was written by : Risha

கண்டியில் தலைதூக்கிய மோதல்களையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையால், அவசரகால நிலையை ரத்து செய்வதனை தாமதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி வன்முறையைத் தொடர்ந்து பத்து தினங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை ரத்து செய்து வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால், அவர் நாடு திரும்பும்வரையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி நாடு திரும்பியதுடன் எதிர்வரும் 18ஆம் திகதி அவசாரகால நிலையை ரத்து செய்யும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg