Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிண்ணம் யாருக்கு? – முக்கிய போட்டி இன்று!

In கிாிக்கட்
Updated: 06:32 GMT, Mar 14, 2018 | Published: 06:32 GMT, Mar 14, 2018 |
0 Comments
1856
This post was written by : Puvanes

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி 20 தொடரின் முக்கிய லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (புதன்கிழமை) பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்பில் இரவு 7 மணிக்கு குறித்த போட்டி நடைபெறவுள்ளது.

ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலாவது போட்டியில் இலங்கையுடன் தோல்வியடைந்தது. எனினும் அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்று தொடர்ந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் வெற்றியடைந்து புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று பங்களாதேஷ் அணியை எதிர் கொள்கின்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமாயின் எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

மாறாக தோல்வியடையும் பட்சத்தில் அடுத்த போட்டியில் முடிவு வரை இந்தியா காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் இதனால் இந்தப் போட்டியை இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கம் பங்களாதேஷ் அணியும் இத்தொடரில் சிறப்பாக ஆடிவருகின்றது. இந்தியாவை முதல் போட்டியில் பதம் பார்த்த இலங்கை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 215 ஓட்டங்களை குவித்தது. எனினும் அந்த இமாலய இலக்கையும் துரத்தி வென்று பங்களாதேஷ் அணி சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.

இரு அணிகளும் பலம்வாய்ந்த அணிகளாக காணப்படுகின்ற நிலையில் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதேவேளை, புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள இலங்கை அணி எதிர்வரும் வெள்ளியன்று பங்களாதேஷ் அணியுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எனினும் இன்று நடைபெறும் இந்திய – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தால் இலங்கை தொடரில் நீடிக்கும் வாய்ப்புகளும் பிரகாசமடையும்.

அதேபோன்று கொழும்பில் இன்று மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg