Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் துருக்கியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது: பிரான்ஸ்

In ஐரோப்பா
Updated: 07:06 GMT, Mar 14, 2018 | Published: 07:06 GMT, Mar 14, 2018 |
0 Comments
1130
This post was written by : Elakkiya

சிரியாவில் அஃப்ரின் பிராந்தியத்தில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் JEAN-YVES LE DRIAN தெரிவித்துள்ளார். சிரியாவில் நேட்டோ நட்பு நாடுகளின் தலையீடு தொடர்பான பிரான்ஸின் வலுவான கருத்தாக இது அமைந்துள்ளது.

வடக்கு சிரியாவின்  எல்லையிலிருந்து குர்திஷ் போராளிகளை, விரட்டுவதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் துருக்கி மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து அங்கு அபிவிருத்தி பணிகளுக்கான பொறுப்பு தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

அமெரிக்கா போன்றே பிரான்ஸூம், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் குர்திஷ் YPG போராளிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கியுள்ளதுடன் குறித்த பிராந்தியத்தில் சிறப்பு படைகளையும் நிலைநிறுத்தியது.

பிரான்ஸின் இச்செயற்பாடு துருக்கியை ஆத்திரமடைய செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg