Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணித் தலைவர் அதிரடி நீக்கம்! – புதிய தலைவர் நியமிப்பு

In விளையாட்டு
Updated: 07:06 GMT, Mar 14, 2018 | Published: 07:06 GMT, Mar 14, 2018 |
0 Comments
1195
This post was written by : Puvanes

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஹொக்கி அணியில் இருந்து முன்னணி வீரர் சர்தார் சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இந்திய ஹொக்கி அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில் அண்மையில் மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா சம்பியன் கிண்ண ஹொக்கி தொடரில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பிரபல வீரர் சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வீரரான சர்தார் சிங் அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளதோடு மன்பிரீத் சிங் தலைவராக நியமிக்கப்பட்டு, கே சிங்லேன்சானா சிங் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg