Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி வழக்கில் மொஸ்கோ ஒத்துழைக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்

In ஐரோப்பா
Updated: 07:58 GMT, Mar 14, 2018 | Published: 07:57 GMT, Mar 14, 2018 |
0 Comments
1095
This post was written by : Elakkiya

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய முன்னாள் உளவாளி விவகாரத்தில் மொஸ்கோ விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை எனில் மேற்கத்தய நாடுகளின் கூட்டு பதிலளிப்பு இருக்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலின் பழமைவாத கூட்டணியின் அரசியல் தலைவர் நொர்பேர்ட் ரோட்ஜென் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகியோர் கடந்த கடந்த 4 ஆம் திகதி சொல்ஸ்பரி பல்பொருள் அங்காடி ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்போதும் சுயநினைவற்ற நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இவர்கள் இருவரும் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசயானத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் என பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் நோர்பெர்ட் ரோட்ஜென், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மொஸ்கோ ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால் கூட்டு மேற்கத்தய பிரதிபலிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg