Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்து வீச்சில் மாற்றம் வேண்டும் என்கிறார் பங்களாதேஷ் கிரிக்கெட் தலைவர்

In விளையாட்டு
Updated: 07:52 GMT, Mar 14, 2018 | Published: 07:52 GMT, Mar 14, 2018 |
0 Comments
1198
This post was written by : JudeDanish

பந்து வீச்சு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஹ்மதுல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்தியக் கிரிக்கெட் அணி வேகப் பந்து வீச்சு மற்றும் சூழல் பந்து வீச்சு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பங்களாதேஷ் அணியிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

வொஹிங்டன் சுந்தர் அல்லது யூஸவெந்திர சஹால், ஆகியோரது பந்து வீச்சுக்களை எடுத்துக் கொண்hல் அவை உண்மையில் வேகம் குறைவானது ஆனாலும் சூழல் தன்மை கொண்டவை.

இவற்;றை நாம் அவதானித்துள்ளோம். இத்தகைய முறைகளை எமது பந்து வீச்சுதுறையிலும் அமுல்ப்படுத்த எண்ணியுள்ளோம்.

சுதந்திரக் கிண்ணத்திற்கான போட்டித் தொடரில் ஜந்தாவது போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்களாதேஷ் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை ஏற்கனவே இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டி ஒன்றில் பங்களாதேஷ் தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்றைய போட்டில் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்குகின்றது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி நான்கு புள்ளிகள் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது. இதேவேளை இன்றைய போட்டில் பங்களாதேஸ் வெற்றி பெறும் இடத்து புள்ளிகள் அடிப்படையில் முன்னேற்றம் அடையும் நிலையுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg