Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புகையிரதம்

In இந்தியா
Updated: 07:58 GMT, Mar 14, 2018 | Published: 07:58 GMT, Mar 14, 2018 |
0 Comments
1194
This post was written by : JudeDanish

இந்தியாவின் வடக்கு சிம்லா நகரத்தில் சுற்றுலாத்துறை போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ள 113 வயதான பாரம்பரிய நீராவி இயந்திர புகையிரதம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீராவி இயந்திரப் புகையிரதம், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1903 ஆம் ஆண்டு கல்கத்தா மற்றும் சிம்லா ஆகிய இடங்களுக்கு இடையிலான போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை 1970 ஆம் ஆண்டிலிருந்து புகையிரதப் பயிற்சிக்கு இந்தப் புகையிரதம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனம் பாரம்பரிய புகையிரதம் என்ற நிலையை இந்த நீராவி இயந்திரப் புகையிரதத்திற்கு வழங்கியிருந்தது.

தற்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சுற்றுலாத் தலமான சிம்லாவில் குறித்த நீராவி இயந்திர புகையிரதம் பயன்படுத்தப்படுகின்றது.

கடல் மட்டத்திலிருந்து 5000 அடியிலிருந்து 7000 அடி உயரமான சிம்லா மலைத்தொடரின் அழகினை சுற்றுலாப் பயணிகள் இந்த புகையிரத்தின் ஊடாகப் பயணிப்பதன் மூலம் இரசித்துவருகின்றனர்.

1970 ஆம் ஆண்டு, டிசல் இயந்திர புகையிரதப் பாவனை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நீராவி இயந்திர புகையிரதப் பாவனை படிப்படியாக வழக்கிழந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg