Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீகார் இடைத்தேர்தல் – பா.ஜ.க. பின்னடைவு (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 11:12 GMT, Mar 14, 2018 | Published: 08:26 GMT, Mar 14, 2018 |
0 Comments
1152
This post was written by : Kemasiya

பீகார் மாநிலத்தின் மூன்று தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி நிலையில் உள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தின் கோக்பூர், புல்வர் மற்றும் பீகாரின் ஹரியானா ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி இடம்பெற்ற இடைத்தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இதுவரையிலான முடிவுகளில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அதேபோன்று புல்வர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அவ்வாறே ஹரியானாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் 21 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. எனவே மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க. பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பீகார் மாநில இடைத்தேர்தல் – வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

பீகார் மாநிலத்திற்கான இடைத்தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இன்று (புதன்கிழமை) காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய குறித்த இடைத்தேர்தலின் முதற்கட்ட வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

அதன்படி அராரியா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிரதீப் சிங் குமார் 2,321 வாக்குகள் வித்தியாசத்திலும், பாபுவா சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரிங்கி ராணி 2,729 வாக்குகள் வித்தியாசத்திலும், ஜெஹானாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் சுதய் யாதவ் 1,200 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg