Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் சுதந்திரத்தில் கைவைக்கும் செயற்பாடு : துரைராஜசிங்கம்!

In இலங்கை
Updated: 10:03 GMT, Mar 14, 2018 | Published: 08:36 GMT, Mar 14, 2018 |
0 Comments
1101
This post was written by : Ravivarman

சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் சுதந்திரத்தில் கைவைக்கும் செயற்பாடு என்பதுடன், சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விடயம் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலார் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், பத்திரிகை அறிமுக உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முகநூல் தொடர்பான கட்டுப்பாடுகள் வரவுள்ள நிலையில் இவை எழுத்துச் சுதந்திரத்திற்கும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கும் இன்றியமையாத ஒன்று என்ற வகையில் முகநூல்கள் முகமூடிகளாக இருக்காமல் வெளிப்படைத்தன்மையாக இருக்கும் நிலையேற்படும். முகநூல்கள் என்பவை முகமூடி நூல்களாக மாறிவிட்டன.

ஒருவர் தனது எழுத்துக்கு பொறுப்புக் கூறவேண்டும். தன்னுடைய முகத்தினைக் காட்டவேண்டும். அந்த முகநூலில் முகம் தெரியவேண்டும். யார் எழுதுகின்றார் என்று முகத்தினை காட்டவேண்டும்.

ஒருவர் எழுதுவதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதையே கருத்துச் சுதந்திரம் கூறுகின்றது. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சிந்தனைச் சுதந்திரம் கருத்து வெளியீட்டு சுதந்திரம் என்ற வகையில் வருகின்ற கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஜனநாயகமுறையில் இருக்கவேண்டும்.

இந்த முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்ட விதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிகின்றோம். இவை வரவேற்கத்தக்கவை ஆகும்” என கி.துரைராஜசிங்கம் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg