Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 09:12 GMT, Mar 14, 2018 | Published: 09:12 GMT, Mar 14, 2018 |
0 Comments
1219
This post was written by : Kemasiya

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என்றும், தன்னை விடுதலை செய்யுமாறும் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்ததோடு, மனுதாரர் குற்றவாளியல்ல என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

அத்துடன் இது தொடர்பில் சி.பி.ஐ. எதிர்வரும் நான்குவார காலத்திற்குள் பதில் வழக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சி.பி.ஐ. அதிகாரி தனது வாக்கு மூலத்தை தவறாக வழங்கியதாகவும், தனக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் கூறி, தன்னை விடுதலை செய்யுமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு தயாரிப்பது தொடர்பில் பேரறிவாளனுக்கு தெரியாதா? – நீதிபதியின் கேள்வி

ஒன்பது மின்களங்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது பேரறிவாளனுக்கு தெரியாதா என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்த பேரறிவாளனின் மனுவை விசாரித்த நீதிபதி மேற்படி கேள்வியை எழுப்பியிருந்தார்.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு சம்மதம் இல்லை என்பதை எவ்வாறு நம்புவது எனக் கேட்டனர்.

தொடர்ந்தும் பல்வேறு தருணங்களில் விடுதலைப் புலிகள் சார்ந்த நபர்களுடன் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்துள்ளது என்றும், வாக்குமூலங்களை வைத்து பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் அனுதாபியாக பேரறிவாளன் இருந்துள்ளார் எனவும் தெரிவித்தனர்.

எனவே 25 வருடத்திற்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு இப்போது தீர்ப்பை மாற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

எனினும் பேரறிவாளனின் மனுவில், தான் வாங்கிக் கொடுத்த மின்களத்தில்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg