Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

12 இலட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு!

In இலங்கை
Updated: 08:48 GMT, Mar 14, 2018 | Published: 08:48 GMT, Mar 14, 2018 |
0 Comments
1090
This post was written by : Ravivarman

நல்லதண்ணி – சிவனொளிபாதமலைக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இதுவரை சேகரித்துள்ளதாக நல்லதண்ணி மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஹேமந்த தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த இலட்சக்கணக்கான யாத்திரிகர்களால் பாவனைக்குப் பின்னர் வீசி எறியப்பட்ட நிலையில் கிடந்த போத்தல்களே இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிகப்படியான பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பகமுவ பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு பிரிவினாலும், நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய பிரிவினாலும் சேகரிக்கப்பட்டதாகவும், நல்லதண்ணி நகரத்திலிருந்து சிவனொளிபாதமலை உச்சி வரை இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் வீசப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசுவதிலிருந்து தவிர்த்து சூழலுக்கு இணக்கமான பருவகால வழிபாடுகளில் ஈடுபடுமாறு அனைத்து யாத்திரிகர்களிடமும் கேட்டுக்கொள்வதாக நல்லதண்ணி கழிவு சேகரிப்பு மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. ஹேமந்த வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg