Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்தேகத்திற்கிடமான பொதிகளால் பிரித்தானியாவில் பரபரப்பு

In
Updated: 09:37 GMT, Mar 14, 2018 | Published: 09:28 GMT, Mar 14, 2018 |
0 Comments
1167
This post was written by : Elakkiya

பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சந்தேகத்திற்கிடமான பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக வாதிடும் முஸ்லிம் தொழிற்கட்சி உறுப்பினர்களான ருசனாரா அலி, மொஹமட் யாசின், ரூபா ஹக் மற்றும் அஃப்சல் கான் ஆகியோருக்கே இவ்வாறு பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியுடன் ‘முஸ்லிமை தண்டிக்கவும்’ என்ற கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தை திறக்க முற்பட்ட ரூபா ஹக்கின் அலுவலக ஊழியர் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை யாசின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையிலான திரவம் வெளியேறியதாகவும் முன்னெச்சரிக்கையாக இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சந்தேகத்திற்குரிய பொதிகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg