Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய விஞ்ஞானியின் மறைவிற்கு இந்திய அரச தலைவர்கள் இரங்கல்

In இந்தியா
Updated: 13:13 GMT, Mar 14, 2018 | Published: 08:56 GMT, Mar 14, 2018 |
0 Comments
1141
This post was written by : Varshini

பிரித்தானியாவின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹோக்கிங்கின் மரணத்திற்கு இந்திய அரச தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஹோக்கிங், இன்று (புதன்கிழமை) காலை தமது 76 ஆவது வயதில் காலமானார்.

அவரின் இறப்பு வேதனையளிப்பதாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயற்பியல் துறையில் பல சாதனைகளைப் படைத்த ஸ்டீபனின் மறைவானது, பேழிப்பாகுமென கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ரோசொப்ட் தலைமை செயலதிகாரி சத்யா நாதெல்லா உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் நோயால் உடலின் பல பாகங்கள் செயலிழந்த நிலையிலும், விஞ்ஞான துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அனைவருக்கும் முன்னதாரணமாக ஸ்டீபன் திகழ்ந்தார். இந்நிலையில், அவரது இழப்பு விஞ்ஞான உலகில் பேரிழப்பாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg