Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு – கொழும்பு ரயிலுக்கு கல்வீச்சு: அறுவர் கைது!

In இலங்கை
Updated: 10:45 GMT, Mar 14, 2018 | Published: 09:02 GMT, Mar 14, 2018 |
0 Comments
1437
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு – கொழும்பு இரவு நேர விரைவுப் ரயிலுக்கு ஏறாவூரில் வைத்து கல் வீசித் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர விரைவு ரயில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் ஏறாவூர் ரயில் நிலையத்தை நெருங்கும்போது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் சொகுசு இருக்கை, இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை பெட்டிகளின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதாக ஏறாவூர் ரயில் நிலைய அதிபர் கே.குபேந்திரகுமார் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் காரணமாக குறித்த கடுகதி ரயில், ஏறாவூரிலிருந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகியே கொழும்பு நோக்கி பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய நாசகாரச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் ஏறாவூர் பொலிஸாரும் ஏறாவூரிலுள்ள சமூக நல அமைப்புக்களும் கவனம் எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg