Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் தென்மேற்கில் புயல் எச்சரிக்கை: மீனவர்கள் பீதியில்

In இலங்கை
Updated: 10:07 GMT, Mar 14, 2018 | Published: 10:07 GMT, Mar 14, 2018 |
0 Comments
1268
This post was written by : poovannan

இலங்கையின் தென்மேற்கிலுள்ள இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மணிக்கு 50 கி.மி. முதல் 60 கி.மி. வரையான வேகத்துடன் காற்று வீசவுள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இன்று (புதன்கிழமை) பாம்பன் துறைமுகத்தில் முன்றாம் நிலை புயல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாம்பன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக மாலையில் பலத்த காற்றும் காலையில் லேசான மழையும் பெய்து வருகின்றது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மீனவர்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தான காலப்பகுதியில் துறைமுகத்தில் ஏற்படும் புயல் எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் எந்தவொரு அறிவிப்போ எச்சரிக்கையோ கொடுப்பதில்லை எனவும் வருங்காலங்களில் முறையாக மீனவ சங்கங்களுக்கு அறிவிப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இலட்சக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. நான்கு நாட்களாக மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பாம்பன் – தெற்குவாடி மற்றும் தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம், உப்புத் தன்மை மற்றும் கடலில் ஏற்படும் அலைகளின் தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொன்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg