Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரும் பிரித்தானியா!

In இலங்கை
Updated: 09:53 GMT, Mar 14, 2018 | Published: 09:44 GMT, Mar 14, 2018 |
0 Comments
1216
This post was written by : Risha

மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டும் வகையில் செயற்படும் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொறிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இனங்களுக்கு இடையிலான மோதல்கள் குறித்த அவரது டுவிட்டர் பதிவியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் விரைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் வெடித்த மோசமான வன்முறையினால் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg