Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம் (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 12:11 GMT, Mar 14, 2018 | Published: 09:43 GMT, Mar 14, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதிச்சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

நிதிச்சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், சபையில் கடும் கூச்சலும் குழுப்பங்களும் ஏற்பட்டது. இதனையடுத்து, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிதிச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அமளியின் மத்தியிலும் சட்டமூலம் தாக்கல்

நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடரில் இன்று (புதன்கிழமை) வரவு செலவுத்திிட்ட நிதிச் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்தார்.

கடந்த இரு வாரங்களாக நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியினால் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று 8ஆவது நாளாகக் கூடிய கூட்டத் தொடரில், தெலுங்கானா அமைச்சர்கள் தமக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்கக் கோரி கூச்சல் எழுப்பினர். அதேபோன்று தமிழக அமைச்சர்கள் காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையை முன்வைத்து கூச்சலிட்டனர். இதைவிட காங்கிரஸ் கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் சீராக இடம்பெறவில்லை.

இத்தனை அமளிக்கு மத்தியிலும் நிதி அமைச்சர் மேற்குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg