Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனைவியை கொலை செய்ய முயன்ற இந்திய கிரிக்கெட் வீரர்? – தோனி கூறும் தகவல்!

In கிாிக்கட்
Updated: 09:33 GMT, Mar 14, 2018 | Published: 09:33 GMT, Mar 14, 2018 |
0 Comments
1401
This post was written by : Puvanes

மொஹம்மட் ஷமி தாய் நாட்டிற்கும் அவர் மனைவிற்கும் துரோகம் செய்யக் கூடிய நபர் அல்ல என இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

தோனி தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனக்கு தெரிந்த மட்டிலும் “ஷமி நல்ல மனிதர் எனச் சுட்டிக்காட்டியுள்ள தோனி, அவர் நாட்டையும், மனைவியையும் ஏமாற்றக் கூடியவர் அல்ல எனவும், இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதால் வேறு எதனையும் தன்னால் கூறமுடியாது எனவும் தோனி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமி, பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முற்படுவதாகவும் ஷமியின் மனைவி  குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தார் நால்வர் மீதும் ஷமியின் மனைவி வழக்கு ஒன்றினையும் தொடர்ந்திருந்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷமியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஐ.பி.எல் தொடரிலும் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, ஷமிக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg