Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு ஆதரவளிக்கும் அவுஸ்ரேலியா

In
Updated: 10:15 GMT, Mar 14, 2018 | Published: 10:14 GMT, Mar 14, 2018 |
0 Comments
1213
This post was written by : Elakkiya

இரசாயன தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரஷ்ய முன்னாள் உளவாளி விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை அழைக்க பிரித்தானியாவுக்கு அவுஸ்ரேலியா ஆதரவளிக்கும் என அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” ரஷ்யாவில் பொருளாதார தடைகள் இருந்தாலும், உளவாளி விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைகள் முடிந்த பின்னர் கூடுதல் பதிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகியோர் கடந்த 4 ஆம் திகதி சொல்ஸ்பரி பல்பொருள் அங்காடியில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும், ரஷ்யாவால் உருவாக்கப்படும் நரம்புமண்டலத்தை பாதிக்கக் கூடிய இரசாயன தாக்குதலுக்கு உள்ளாகியே மயக்கமடைந்தனர் என பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாhளுமன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விடயத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியன பிரித்தானியாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில் தற்போது அவுஸ்ரேலியாவும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg