Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் அளத்தல் கருவிகளுக்கு முத்திரை இடும் பணிகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 10:08 GMT, Mar 14, 2018 | Published: 09:51 GMT, Mar 14, 2018 |
0 Comments
1097
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வேலைத்திட்டங்கள் இன்று (புதன்கிழமை) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல். நௌஷாத் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் சுமார் 1000இற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், தொழிலகங்கள், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய கடைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அலுவலக வளாகத்தில் வார நாட்களின் அலுவலக நேரங்களில் இந்தப் பணிகள் தினந்தோறும் இடம்பெறும்.

இக்காலப் பகுதியில் தம்வசமுள்ள நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இட்டுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg