Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரிஸிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு கண்டனம்

In
Updated: 11:50 GMT, Mar 14, 2018 | Published: 10:53 GMT, Mar 14, 2018 |
0 Comments
1114
This post was written by : poovannan

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருப்பதென்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகுமென, அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியத்தின் பிரதித் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் பொருளாளருமான எஸ்.ரீ.எம்.ஹூதைப் தெரிவித்துள்ளார்.

பாலமுனை காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது சமூகத்துக்கு எதிராக நடக்கின்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மிகவும் தைரியமாக கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவருக்கு எதிராக ஒழுக்காற்று நவடிக்கையொன்றினை எடுக்க கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தீர்மானித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

சமூகத்துக்கு அநீதி இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் அதற்காக ஒருமித்து குரல் கொடுக்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனைவதா? கட்சியில் இருக்கின்றவர்கள் தனிப்பட்ட குரோதங்களை வெளிக்காட்டுவதை விட்டு ஆளுமை மிக்க அரசியல் பிரதிநிதிகளை உருவாக்குவதில் கட்சியின் தலைமை மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

கட்சி செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தை கட்சியின் தலைவருக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg