Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசரகால நிலையும்- சமூக வலைத்தள முடக்கமும் திட்டமிட்ட சதி: விக்ரமபாகு

In இலங்கை
Updated: 10:37 GMT, Mar 14, 2018 | Published: 10:37 GMT, Mar 14, 2018 |
0 Comments
1527
This post was written by : Risha

அரச சார்புடைய வர்த்தகர்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் வகையிலேயே நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தற்போது நாட்டின் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன. ஆனால் மக்களது வர்த்தக நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதற்காக பேஸ்புக் தடையை நீடிப்பதற்காக அவசரகால நிலையையும் நீடித்து வருகின்றனர்.

இனவாதத்துடன் தொடர்புபடாத நடவடிக்கைகள் குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அரச சார்புடைய வர்த்தகர்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் வகையிலேயே நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனை ஒருபோதும் இடமளிக்க முடியாது. தற்போது நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் காணப்படுபவர்கள் யார் என்பதை நாம் நன்கறிவோம். இச்சம்பவம் குறித்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு பௌத்த தேரரேனும் கைது செய்யப்பட்டதாக இல்லை.

ஏன் தேரர்களுக்கு மாத்திரம் அவ்வாறு சலுகை கொடுக்கப்படுகிறது. வீதியில் இறங்கி கலவரத்தில் ஈடுபட அவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா” என்றும் கேள்வி எழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg