Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய வீரர்! – உருவெடுக்கும் புதுச் சர்ச்சை

In கிாிக்கட்
Updated: 10:42 GMT, Mar 14, 2018 | Published: 10:42 GMT, Mar 14, 2018 |
0 Comments
1207
This post was written by : Puvanes

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமியிடம் ஊழல் தடுப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஷமி தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தினை மேற்கொண்ட போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஹமியின் மனைவி பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொல்கத்தா பொலிஸார் வழக்கினை பதிவு செய்ததோடு, ஷமியின் தென்னாபிரிக்க பயணத்தின் அனைத்து தகவல்களையும் வழங்குமாறு இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், ஹமியிடம் முறையான விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையினை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஊழல் தடுப்புக் குழுவிடம் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஷமியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பிலான விசாரணைகளை ஊழல் தடுப்பு பிரிவு தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, ஷமி தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள காரணத்தினால் ஷமியின் கிரிக்கெட் வாழ்வு சிக்கலை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg